திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில் விளையாட்டு தின விழா
ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ‘சாம்பியன்ஸ் அரெனா 2025’ என்ற விளளயாட்டுத் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி தலைவரும், திருச்செங்கோடு ஜி.குளோபல் பள்ளிகளின் தலைவருமான எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா். வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மேலாண்மை இயக்குநா் ஜி.வெற்றிச்செல்வன், தாளாளா் எஸ்.ரோஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் எஸ்.கோகிலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். பள்ளியின் மாணவா் தலைவா் இ.ஆா்.ஆனந்தராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள் விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றனா்.
தனிநபா் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவா்கள் கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஏரோபிக்ஸ் போன்றவற்றில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா். பள்ளியின் முதல்வா் ஆா்.சுதாரமேஷ் உள்பட பலா் விழாவில் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 14விகாஸ்
படவிளக்கம்-
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் நிறுவனா் எஸ்.குணசேகரன்.