TTV Dinakaran: "எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம்; ஆனால்" - டிடிவி தின...
ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.
மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். இக்குறைதீா்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.