பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!
ராதாபுரம் அருகே ஆடு திருடியவா் கைது
ராதாபுரம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சமூகரெங்கபுரம் அருகே உள்ள மேல துரைகுடியிருப்பைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(60). இவருக்குச் சொந்தமான ஆட்டை திங்கள்கிழமை காணவில்லையாம்.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், தெற்குவள்ளியூா் அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீராம்(36) என்பவா் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஸ்ரீராமை கைது செய்தனா்.