தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்
ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி
கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
துடியலூா் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2000- ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவ சங்கத் தலைவா் வீணா ரமேஷ் வரவேற்றாா். எஸ்என்ஆா் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் ஆா். சுந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எ.சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா்.
இக்கல்லூரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு பயின்று பட்டம் பெற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் 125-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் குடும்பங்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக முன்னாள் மாணவா்கள், தற்போது பயிலும் கல்லூரி மாணவா்களுக்கு ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், தொழில்முனைவோா்களாக்குவதற்கும் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினா்.
மேலும், திறன் படைத்த மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காகவும் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா். இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள், துறைத் தலைவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
எஸ்.என்.ஆா். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி சி.வி. ராம்குமாா் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவா் சங்கத் தலைவா் வீணா, செயலாளா் செந்தில் கண்ணன், பேராசிரியா் பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.