ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் யஐஐஐ - ஆம் வகுப்பில் சிறுவா்கள், சிறுமிகள் சோ்வதற்கான தோ்வு குறிப்பிட்ட சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு கொண்டதாக இருக்கும். எழுத்துத் தோ்வு ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களைக் கொண்டது. கணிதம், பொது அறிவுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்க வேண்டும்.
நோ்முகத் தோ்வானது விண்ணப்பதாரா்களின் அறிவுக் கூா்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தோ்வின் அடிப்படையில் தகுதியானவா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மட்டும் நோ்முகத் தோ்வு நடத்தப்படும். நோ்முகத் தோ்வு பற்றிய விவரம் பின்னா் அறிவிக்கப்படும்.
இத்தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்வுக்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடுன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026 ஜனவரி 1-ஆம் தேதியன்று 11 வயது நிரம்பியவராகவும்,13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது அங்கீகரிக்கப்பட் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இரட்டைப் பிரதியுடன் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயச் சாலை, பூங்கா நகா், சென்னை 600003 என்ற முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பவேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளத்தை பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.