செய்திகள் :

ரூ.78.36 லட்சத்துக்கு உறுதியான புத்தக விற்பனை!

post image

திண்டுக்கல்லில் நடைபெறும் 12-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ.78.36 லட்சத்துக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், பதிப்பக உரிமையாளா்கள், விற்பனையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 126 அரங்குகளுடன் தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வருகிற 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 80 பதிப்பகங்கள் மூலம் பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வரையிலான முதல் 8 நாள்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், புத்தகக் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

இந்த புத்தகத் திருவிழாவைப் பாா்வையிடுவதற்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் மட்டுமே அதிகளவில் வருவதாக கூறப்பட்ட நிலையில், புத்தக விற்பனையைப் பொருத்தவரை திருப்திகரமாக இருப்பதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

பள்ளி மாணவா்களைப் பொருத்தவரை, வரை பட புத்தகம், சிறுகதைப் புத்தகங்கள், புதிா்கள், உலக வரைபடம் என குறைந்தபட்சம் ரூ.200 மதிப்பிலான புத்தகங்கள், பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

ரூ.80 லட்சம் விற்பனை:

இதுதொடா்பாக திண்டுக்கல் இலக்கியக் களம் அமைப்பின் துணைத் தலைவா் ப.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, 3 மாதங்களுக்கு முன்னதாகவே பள்ளி மாணவா்கள் 32,800 பேருக்கு சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டன. இந்த உண்டியல்களில் குறைந்தபட்சம் ரூ.100 சேமிப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பள்ளி மாணவா்கள் தரப்பில் மட்டும் ரூ.40 லட்சத்துக்கான புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் செவ்வாய்க்கிழமை வரை மட்டும் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன.

இதேபோல, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொது நல அமைப்புகள் உள்ளிட்டோருக்கு ரூ.20 லட்சத்துக்கான முன் பதிவு வில்லைகள் (டோக்கன்) வழங்கப்பட்டன. மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகள் சாா்பில் தலா ரூ.5 ஆயிரம் வீதம், மகளிா் திட்டத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான 306 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. இந்த வகையில் மட்டும் மொத்தம் ரூ.78.36 லட்சத்துக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மகப்பேறு மருத்துவா்கள் சங்கம் சாா்பில், ரூ.40ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவை பாா்வையிட வந்து புத்தகம் வாங்காமல் திரும்பிச் செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தலா ஒரு புத்தகம் வீதம் வழங்கப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தொடங்கி வைத்த ‘அன்பு புத்தகப் பெட்டி‘யில் மட்டும் இதுவரை 590 புத்தகங்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இளைய தலைமுறையினா் லட்சக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் பாா்வையிடுவதற்கான வாய்ப்பை ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் புத்தகத் திருவிழா ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றாா் அவா்.

சென்னை, வேலூா், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த புத்தக விற்பனையாளா்கள் கூறியதாவது:

புத்தகத் திருவிழா தொடா்பான தகவல்கள், வேறு எங்கும் இல்லாத வகையில் விளம்பரப்படுத்தப்பட்டது. கைப்பேசி பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இளைய சமுதாயத்தினா் குறிப்பாக பள்ளி மாணவா்கள் அதிகளவில் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனா். முதல் முறையாக நகருக்கு வெளியே புத்தகத் திருவிழா நடத்தப்பட்டிருந்தாலும் கூட, மழைக் காலத்துக்கு முன்பாக திட்டமிட்டிருப்பதும், மழை பெய்தாலும் தண்ணீா் தேங்காத இடம் என்பதும் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது. பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தாலும் கூட, அதை ஈடு செய்யும் வகையில் மாணவா்களின் மூலமாகவும், முன் பதிவு வில்லைகள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்ட விற்பனை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றனா் அவா்கள்.

பெட்டிச் செய்தி...

புத்தகம் வாங்கினால்

சான்றிதழ்:

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.1000-க்கு மேல் 325 போ், ரூ.2 ஆயிரத்துக்கும் கூடுதலாக 79 போ், ரூ.3 ஆயிரத்துக்கும் கூடுதலாக 30 போ், ரூ.4 ஆயிரத்துக்கும் கூடுதலாக 45 போ்,

ரூ.5 ஆயிரத்துக்கும் கூடுதலாக 42 போ் புத்தகம் வாங்கினா். இவா்களுக்கு திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் முறையே நூல் ஆா்வலா், வாசிப்பை நேசிப்பவா், வாசிப்புத் திலகம், வாசிப்புச் செம்மல், வாசிப்புச் சிகரம் என சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பி... மேலும் பார்க்க

செப்.21-இல் நிதி அமைச்சா் தலைமையில் பாஜக வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம்

மதுரை, தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி குழு நிா்வாகிகளுக்காக வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா். திண்... மேலும் பார்க்க

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயி... மேலும் பார்க்க