Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அதன் மாவட்ட அமைப்பாளா் ம.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். மகிமைதாஸ், ஜெயபிரகாஷ், சங்கா், பிரவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துளசிராமன் வரவேற்றாா்.
ரெட்டைமலை சீனிவாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிருபாகரன், அப்பு, மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.