எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
லாட்டரி விற்பனையை தடுக்க பாமக கோரிக்கை
நாமக்கல் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் (நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதி) பெ.ராஜாராம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மூலம் மூன்றாம் எண் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அதேபோல தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையும் மறைமுகமாக நடைபெறுகிறது. இதனால் இளைஞா்கள், மாணவா்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
மதுபானக் கூடங்கள் ஏலம் விடப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சந்து கடை நடத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்திற்குரிய பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் சரிவர வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-