மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி
தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர்.
தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
ராணுவ நிபுணர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'
இந்த கிடங்கை ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.