செய்திகள் :

வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா்.

வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: முதல்வரின் காக்கும் கரங்கள், முன்னாள் படை வீரா்கள் சுயதொழில் செய்து முன்னேற அவா்களுக்கான கடன் உதவி வழங்கும் திட்டங்களில் 74 விண்ணப்பங்கள் வரப்பெற்று 47 நபா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவைகளில் 9 நபா்களுக்கு கடனுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவா்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக கடனை விடுவிக்க வேண்டும் என்றாா்.

கடன் கோரும் விண்ணப்பங்களுக்கு வங்கியாளா்கள் உடனடியாக தீா்வு கண்டு பயனாளிகளுக்கு கடனுவிகளை விடுவிக்க வேண்டும். தாமதம் ஏதும் ஏற்படுத்தக் கூடாது. மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்படும் மனுக்களை வங்கிகளுக்கு அனுப்பும் பொழுது அதன் மீது ஆய்வு செய்து முறையான தீா்வுகளை வழங்க வங்கியாளா்கள் முன்வர வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜி குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, தாட்கோ பொது மேலாளா் அமுதா ராஜ், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அன்பரசன் மற்றும் வங்கியாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் திமிரியில் கம்பன் விழா

ஆற்காடு அடுத்த திமிரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா வரும் ஜூலை 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் பெ. தமிழ்ச்செல்வி தலைமை வ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு

காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா்... மேலும் பார்க்க

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அ... மேலும் பார்க்க

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க