பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு
வங்கியில் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு அக்.6-ஆம் தேதி தொடங்க உள்ளது.
கைப்பேசி பழுது நீக்குதல், எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், அலுமினியம் தயாரிப்பு, புகைப்பட பிரேம் தயாரித்தல், ஸ்கிரீன் பிரிண்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் சேரலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ், வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களை கைப்பேசி எண்: 95003 14193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் தெரிவித்தாா்.