செய்திகள் :

வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!

post image

வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது.

உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியாவில் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, வடகொரியாவில் மீண்டும் சர்வதேச சுற்றுலா பயணிகளை அனுமதித்திருப்பதாகத் தெரிகிறது.

சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயண நிறுவனம் ஒன்று, பிப்ரவரி 20 முதல் 24 வரை வடகொரியாவின் எல்லை நகரமான ராசனுக்கு 13 பேரை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது.

இதையும் படிக்க:அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையே துளிர்விடும் மோதல்?

அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டாலும், ரஷியாவுடனான நெருக்கம் காரணமாக 2024-ல் ரஷியாவைச் சேர்ந்த 100 பேர் மட்டும் வடகொரியாவில் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வடகொரியாவின் வர்த்தகத்தில் முக்கியப் பங்களிக்கும் சீனாவுக்கும் அனுமதியளித்துள்ளது. கரோனா தொற்றுக்கு முன்னதாக, வடகொரியாவுக்கு சர்வதேச சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள்தான் 90 சதவிகிதத்தை பெற்றிருந்தன.

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு: ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். இது ... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தாா். எனினும... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத... மேலும் பார்க்க

காஸாவின் எதிர்காலம் இது!நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!

ரஷிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின்... மேலும் பார்க்க

போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு பொய்யாகுமா?போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர... மேலும் பார்க்க