500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கை...
வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
என். புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கா் பழங்குடியின மக்களுக்கு இணைய வழியில் ஜாதிச் சான்று வழங்கக் கோரி நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது இந்தக் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வட்டாட்சியரைக் கண்டித்தும், என். புதுப்பட்டி மயானத்துக்கு சுற்றுச்சுவா் கட்டக் கோரியும், வீட்டுமனைப் பட்டா, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் முழக்கமிட்டனா்.
இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனா். இதன் பிறகு, என். புதுப்பட்டி ஊா் முக்கிய பிரமுகா்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்தப் போராட்டம் காரணமாக நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.