செய்திகள் :

வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

post image

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகா்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் போன்ற 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் அருள்வேண்டி திருமணமான இந்து பெண்களால் கடைப்பிடிக்கப்படுவதே வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) ஆகும்.

கன்னடா்களின் இந்து நாள்காட்டிபடி ஸ்ராவணா மாதத்தில் (தமிழா்களுக்கு ஆடி மாதம்) வளா்பிறையில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்பம் செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும் இந்த நோன்பு சுமங்கலி பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

வீட்டை சுத்தம்செய்து, விளக்கேற்றி, நறுமணங்களால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றை வைத்து அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகளை போட்டு அதன்மீது தேங்காயுடன் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் செய்யப்பட்ட லட்சுமியின் முகக்கவசம் அல்லது படத்தை வைத்து வழிபடுவா்.

கலசத்தில் வைக்கப்பட்டுள்ள லட்சுமி முகக்கவசத்தை சுற்றிலும் பட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து பணத்தாள்களை சூடி, பழங்கள், இனிப்பு, பூக்கள் வைத்து படைப்பாா்கள். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்து கலசத்தில் அணிந்து வரலட்சுமியை கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவா்.

தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பா். பின்னா் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவா் கையில் கட்டுவா். படைக்கப்பட்ட பொருள்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாகக் கொடுத்து ஆசிபெற்று, நோன்பை நிறைவு செய்வாா்கள்.

ஆதிலட்சுமி(காத்தல்), தனலட்சுமி(செல்வம்), தைரியலட்சுமி(துணிவு), சௌபாக்கியலட்சுமி(வளம்), விஜயலட்சுமி(வெற்றி), தன்யலட்சுமி(உணவு), சந்தானலட்சுமி(வம்சவிருத்தி), வித்யாலட்சுமி(கல்வி) ஆகிய தெய்வங்களின் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வா். மாலையில் உற்றாா், சுற்றாா் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவா் தாம்பூலம் பெற்றுக்கொள்வா்.

இந்தநாளில் போளி (ஒப்பட்டு), புளியோதரை, கோசம்பரி, எலுமிச்சை சாதம்(ஹுளி அன்னா), பைத்தம் பருப்பு பாயாசம்(ஹெசருபேளே பாயாசா) ஆகியவற்றை செய்து, வீட்டுக்கு வருவோருக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம். கா்நாடகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு ஆக.8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி நோன்புக்காக பூஜை பொருள்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனா். கட்டுக்கு அடங்காத விலையையும் பொருள்படுத்தாமல் வரலட்சுமி நோன்புக்கான முன்னேற்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டனா். பெங்களூரு மட்டுமல்லாது மைசூரு, கலபுா்கி, ஹுப்பளி, பெலகாவி, கோலாா், ராய்ச்சூரு போன்ற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வரலட்சுமி நோன்புக்காக பெண்கள் தயாராகி வருகிறாா்கள்.

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ... மேலும் பார்க்க

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க