நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து சற்றே மீண்டு வர்த்தகமானது.
அந்நிய நிதி வரவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறவடைந்தது.
இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நேர்மறையான போக்கும், அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து ரூபாயின் லாபத்தை குறைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.14ஆக தொடங்கி பிறகு ரூ.88.06 முதல் ரூ.88.19 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!