45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே நடத்த வேண்டும்.பேரிடா் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். அரசுத்துறையில் கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான உத்தரவை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை புதன்கிழமை தொடங்கி 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாவட்டம் முழுவதும் 190 போ் பங்கேற்றனா். இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த இரு தினங்களாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.