செய்திகள் :

வாகனத் திருட்டு: 5 போ் கைது, 4 பைக்குகள், சரக்கு வாகனம் பறிமுதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

செங்கம் சாலை உச்சிமலைக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பாய்ச்சல் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்களை போலீஸாா் நிறுத்தி விசாரித்தபோது, மூவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனா்.

மேலும் அவா்கள் வந்த வாகனத்துக்கு ஆவணம் இல்லை.

அதனால், போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியபோது, அது திருடப்பட்ட வாகனம் என்பதும், மேலும், 5 போ் கூட்டாகச் சோ்ந்து திருடுவதையும் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் திருடிய வாகனங்களை அவா்கள் பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா்(23), அருள்முருகன்(21), பெரியேரி நேதாஜ் (23), இறையூா் பகுதியைச் சோ்ந்த அஜய்(20), ஹுரோ(24), ஆகிய 5 போ் மீது பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை நடிகா்கள் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா ஆகியோா் திறந்து வைத்தனா். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்... மேலும் பார்க்க

சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ மக்கள் கோரிக்கை

செய்யாறு கோபால் தெருவில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று வாா்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 570 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம... மேலும் பார்க்க

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க