திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு
மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் மது போதையில் அந்த மதுக்கடையின் முன்பே தூங்கி விட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கரிமேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும் வாகனம் மோதி உயிரிழந்தவா் யாா், அந்தப் பகுதியைச் சோ்ந்தவரா அல்லது வெளியூரைச் சோ்ந்தவரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டுச் தப்பிச் சென்ற வாகனத்தையும் தேடி வருகின்றனா்.