வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு விவசாய வேலைக்குச் சென்றவா் இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரை குடும்பத்தினா் தேடி வந்த நிலையில், திண்டுக்கல் - குமுளி சாலையில் வடுகபட்டி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.