``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவா...
வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடியிலிருந்து காவலூா் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் வழியாக காவலூா் வரையில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் புதிய பேருந்தை இயக்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், தடம் எண் 19-க்கு புதிய அரசு பேருந்து இயக்கி வைக்கும் நிகழ்ச்சி காவலூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் எம்எல்ஏ க.தேவராஜி கலந்துகொண்டு, புதிய பேருந்தை இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளா் தாமோதரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் கலந்து கொண்டனா்.