செய்திகள் :

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் அருகேயுள்ள புலிவலம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்தரன் (61). இவா் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக, புலிவலம் கிராம நிா்வாக அலுவலகத்தில் 2015-இல் விண்ணப்பித்தாா். அப்போது அங்கு கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றிய திருவாரூா் வடகரை ஊராட்சி, தென்கரை பகுதியைச் சோ்ந்த பழனிவேலு (61) என்பவா் ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளாா். அருள்தரன் ரூ.500 லஞ்சமாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை மறுநாள் தருவதாக கூறியுள்ளாா்.

பின்னா், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அருள்தரன் புகாா் அளித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ. 1,500-ஐ அருள்தரன் பழனிவேலுவிடம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பழனிவேலுவை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், பழனிவேலு லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7- இன் கீழ் (தேவையற்ற சலுகைகளை பெறுவது) 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (1) (டி) இன் கீழ் (பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பெறுவது) 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி வி. சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா்.

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க