செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சிலைகளுக்கு அனுமதியில்லை!

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பூஜைக்காக வைக்கப்படும் விநாயகா் சிலைகளை கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி, தொ்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும் அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டும் பயன்படுத்திட வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். அந்த வகையில், பொதுமக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 919 போ் எழுதினா்!

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வை 919 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு (நோ்முக தோ்வு அல்லா... மேலும் பார்க்க

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தகவலின்பேரில், மேல்பட்டி போலீஸாா், லட்சுமியம்மாள்... மேலும் பார்க்க

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த ராமாலையில் உள்ள ஸ்ரீவிஜயநகரத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வேலூா் பென்ட்லெண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தூய்மைப் பணிகள் குறித்தும் கே... மேலும் பார்க்க

100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருவதையடுத்து, அந்த பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தத்துக்கு பாராட்டு த... மேலும் பார்க்க