செய்திகள் :

வியட்நாமில் `ஆப்பிள் மேக்புக்' : மிச்ச பணத்தில் 11 நாட்கள் டூர்; பலே பிளான் போட்ட இந்தியர் - எப்படி?

post image

ஒரு இந்தியர், தனது சாமர்த்தியமான யோசனை மூலம் `ஆப்பிள் மேக்புக்'கை வியட்நாமில் குறைந்த விலையில் வாங்கி, அங்கே பதினொரு நாட்கள் விடுமுறையை அனுபவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் விலை இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி காரணமாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஒரு சாமர்த்தியமான யோசனையை செயல்படுத்தியதாக ரெடிட்டில் பகிர்ந்துள்ளார்.

ரெடிட் பதிவின்படி, இந்தியாவில் ₹1.85 லட்சம் விலையுள்ள மேக்புக்கை வியட்நாமில் கிடைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான VAT வரி சலுகையைப் பயன்படுத்தி, ₹1.48 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

PC: nationalgeographic

இதன் மூலம் சுமார் ₹36,500 மிச்சப்படுத்தியுள்ளார். இந்தத் தொகையில் விடுமுறையையும் கழித்திருக்கிறார்.

இவர் தனது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மிகக் குறைந்த விமானக் கட்டணத்தில் ஹனோய் சென்றிருக்கிறார். அங்கு,VAT (Value-added tax) வரி சலுகை வசதிக்கு ஏற்றவாறு ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ஆராய்ந்து, தேவையான விலைப்பட்டியலைப் பெற்றிருக்கிறார்.

விமானப் பயணம், தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் மேக்புக் வாங்கியது என மொத்த செலவு ₹2.08 லட்சம் வந்திருக்கிறது.

VAT வரி சலுகைக்குப் பிறகு இது ₹1.97 லட்சமாகக் குறைந்திருக்கிறது. மேக்புக்கின் விலையைக் கழித்தால், அவரது வியட்நாம் விடுமுறைக்கு ₹48,000 மட்டுமே செலவாகியிருக்கிறது.

இவரது ரெடிட் பதிவு இணையத்தில் வைரலாகி, இதேபோல், அடுத்த ஐபோன் வெளியீட்டின் போது வியட்நாம் அல்லது துபாய்க்கு செல்லவுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Elon Musk: தனது 3 வயது மகனின் ஓவியத்தை அனிமேஷனாக பகிர்ந்த எலான் மஸ்க் - எப்படித் தெரியுமா?

எலான் மஸ்க்கின் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஷிவோன் ஜிலிஸ், தனது மூன்று வயது மகன் வரைந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் (Grok Imagine) கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளார். ஸ்ட்ரை... மேலும் பார்க்க

Health: மெக்னீசியம் கிரீம் தடவினால் தூக்கம் நன்றாக வருமா?!

செல்போனை ஓப்பன் செய்தாலே, 'நைட்ல மெக்னீசியம் கிரீமை உடம்புல தடவிக்கிட்டுப் படுத்தா நல்லா தூக்கம் வரும்' என்கிற ரீல்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. மெக்னீசியம் கிரீம் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம்; நன்ம... மேலும் பார்க்க

Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 6 - முக்கிய செய்திகள்!* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.* மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலாத்தலமாக மாதேரான் மலைப்ப... மேலும் பார்க்க

Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! என்ன வீடியோ அது?

நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு விளம்பர வீடியோ, 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக புதிய சாதனை படைத்துள்ளது. ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்துட... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றம்: `கட்சி செய்தித்தொடர்பாளர் நீதிபதியாக நியமனமா?' - பாஜக சொல்வதென்ன?

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீ... மேலும் பார்க்க

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க