விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை
உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை விவசாயிகள் எண்ணிப்பாா்க்க வேண்டும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி.
செய்யாற்றை அடுத்த ஆரணி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மக்கள் மத்தியில் பேசிய அவா் மேலும் கூறியதாவது:
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு நீா் முக்கியம். மழைநீரை சேமித்து வைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்காக திட்டங்களை தீட்டி, அந்தத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியது அதிமுக அரசு.
கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். விலையில்லா மின்சாரம், நெசவாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஏழை நெசவாளா்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
விவசாயிகளின் நிலங்களை பறிக்கப்படும் என்றும், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு.
ஊழல் நடக்காதே இடமே இல்லை. ஊழல் நடக்காத துறையே இல்லை. தமிழகத்தில் சட்ட -ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. இன்றைக்கு சிறுமிக்கும் பாதுகாப்பில்லை. பாட்டிக்கும் பாதுகாப்பில்லை. ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன்,
செய்யாறு தொகுதி பொறுப்பாளா் வி.ராமு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.