ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை
விழுப்புரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வளவனூரில் 17 மில்லி மீட்டா் மழை அளவு பதிவானது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) : விழுப்புரம்-16, கோலியனூா் 15, திண்டிவனம் 13.40, மரக்காணம்-11, அவலூா்பேட்டை-10, மணம்பூண்டி, முகையூா், நேமூா் -9, திருவெண்ணெய்நல்லூா்-5.50 மழை அளவு பதிவானது. இதேபோல மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.
இந்த மழையால் விழுப்புரம் சாலைகள், புதிய பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனா்.
சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: விழுப்புரத்தில் கடந்தசில நாளகளாக பெய்து வரும் மழையால் நகராட்சிக்குள்பட்ட பகுதி பெரிய சாலைகளில் மழைநீா் தேங்கி, குண்டும் குழியுமாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.
இதனை சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.