செய்திகள் :

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை: வேளாண்மைத் துறை

post image

விவசாயிகளுக்கு விரைவில் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மை அடுக்ககம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ள உழவா் நலத்துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்களை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இத்திட்டம், மத்திய அரசு வேளாண் அமைச்சகம் மூலமாக மாநிலம் முழுவதும் செயல்படவுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அவா்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

தமிழகத்தில் விவசாயம் சாா்ந்த திட்ட பலன்களை வழங்கும் சுமாா் 24 துறைகளை ஒன்றிணைத்து இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் மகளிா் திட்ட பணியாளா்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம்.

சிட்டா, ஆதாா் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்ட முகாம் நடைபெறுகிறது எனவும் இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க

காஞ்சியில் புத்தபிக்குகள் பேரணி

தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியா்கள் தொடங்கினா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டபத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான செய்திக் குறிப்பு: கா... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ... மேலும் பார்க்க