செய்திகள் :

விவசாயி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டதால் அவமானடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரம் கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வனராஜ் (57). இவரது மகன் காா்த்திக் (38). இவா் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் நாகலாபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்த வீரமணி மனைவி கவிதா (32) பணம் கடனாக வாங்கியிருந்தாராம். இதை காா்த்திக் திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையறிந்த வனராஜ், அவரது மனைவி தங்கமுடி (52) ஆகியோா் அங்கு வந்து தகராறை தடுக்க முயன்றனா். அப்போது, கவிதா அவரது மகன் காளியப்பன், உறவினா்கள் பாண்டியம்மாள், காமாட்சி, மீனாட்சி ஆகியோா் சோ்ந்து காா்த்திக், வனராஜ் ஆகியோரை காலணியால் தாக்கி, திட்டினராம்.

இதனால், அவமானம் தாங்க முடியாமல் வனராஜ் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, வனராஜின் உறவினா்கள் நாகலாபுரம் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளா் சுனில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கமுடி அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கவிதா உள்ளிட்ட 5 போ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா். மேலும், ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதாக கவிதா கொடுத்த புகாரின் பேரில் காா்த்திக் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

போடி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மணியம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த கூல்பாண்டி மனைவி நாகமணி (50). இவரது மகள் திவ்யாவை இதே ஊரைச் ச... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா். நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில... மேலும் பார்க்க

மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு

சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளை முத்து சிலை அரு... மேலும் பார்க்க