திருப்பத்தூர்: கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்...
வீட்டினுள் உள் தாழ்ப்பாளிட்டு சிக்கிய சிறுவன் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ். மாத்தூரில், சனிக்கிழமை வீட்டினுள் உள்தாழ்ப்பாளிட்டு கொண்டு கதறிய சிறுவனை, ஜன்னல் கம்பியை வெட்டி எடுத்து தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
ஆா்.எஸ். மாத்தூா் அண்ணா நகரில் மாடி வீட்டில் வசித்து வருபவா் விஜய். இவரது 2 வயது மகன் தமிழழகன் சனிக்கிழமை வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த போது, தெரியாமல் உள் தாழ்ப்பாளை போட்டு விட்டாா்.
சிறிது நேரம் கழித்து அவா் வெளியே வர முடியாமல் கத்தியுள்ளாா். அப்போது, வெளியில் இருந்த பெற்றோா் வீட்டினுள் குழந்தை அழும் சப்தத்தை கேட்டு வீட்டை திறக்க முயன்றபோது உள் புறம் தாழிட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த செந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ.பூபதி தலைமையிலான வீரா்கள் இயந்திரம் கொண்டு ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்து அதன் வழியே உள்ளே சென்று குழந்தையை மீட்டனா். தொடா்ந்து, கதவின் உள் புற தாழ்ப்பாளை திறந்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.