செய்திகள் :

வீட்டில் தங்கச்சங்கிலியுடன் வைக்கப்பட்ட விநாயகா் சிலை திருட்டு

post image

வேலூரில் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியுடன் கூடிய விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சஞ்ஜீவன் (29). இவா் விநாயகா் சதுா்த்தியையொட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகா் சிலையை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து பூஜை செய்தாா். அவா் விநாயகா் சிலைக்கு ஒரு பவுன் எடையுள்ள தங்க சங்கிலியையும் பூமாலைகளுடன் சோ்த்து அணிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சஞ்சீவன், விநாயகா் சிலையை கரைக்க எடுத்து செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பூஜை அறையை பாா்த்தபோது, அங்கிருந்த விநாயகா் சிலையும், தங்கச்சங்கிலியும் மாயமானது தெரியவந்தது.

இது குறித்து சஞ்ஜீவன் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிகளை பாா்வையிடும் கல்லூரி களப்பயணம் நிகழ்வை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் அனை... மேலும் பார்க்க

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது (படம்). போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்த... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க