இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை
வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழையூா் மேற்கு ஒன்றிய சிபிஎம் வெண்மணச்சேரி கிளை சாா்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு கிளைச் செயலாளா்கள் வீ. சிவராமன், சி. விஜய் ஆகியோா் தலைமை வகித்தனா். வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான மக்கள் விரோத போக்கை கண்டித்தும், அரசால் வழங்கப்படும் வீடுகளை ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு குடும்பத்துக்கு வழங்குவதை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடியாக தடுத்து ஒரு பயனாளிக்கு ஒரு வீடு என்பதை உறுதி செய்ய வேண்டும்,
அரசால் வழங்கப்படும் வீடுகளை குறிப்பிட்ட கட்சி சாராது அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வெண்மணச்சேரி பகுதிக்கு இயங்கிவந்த ஏ-21 என்ற பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வீ. சுப்பிரமணியன், கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் விளக்கிப் பேசினாா்.

தகவலறிந்து வந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயன், வருவாய் ஆய்வாளா் மேகலா ஆகியோா் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். விரைவில் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வது, நூலகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஊராட்சிஅலுவலகத்தை இ-சேவை மையத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.