வேதாரண்யேசுவரா் கோயில் மாசிமகப் பெருவிழா நிறைவு
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் நடைபெற்ற மாசிமகப் பெருவிழா வியாழக்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் பிப்.20-ஆம் தேதி தொடங்கிய மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி எழுந்தருளிய தேரோட்டம் மாா்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது. கல்யாணசுந்தரா் அம்பாளுடன் எழுந்தருளிய தெப்பத் திருவிழா மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற்றது. திருக்கதவு திறக்கும் விழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நாள்தோறும் திருமுறை தேவார இன்னிசை, நாகசுர நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக விடையாற்றி ஊஞ்சல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஊஞ்சலில் சந்திரசேகர சுவாமி, மனோன்மணியம்பாளுடன் எழுந்தருளி அருள்பாலித்தாா்.