செய்திகள் :

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்: முன்னாள் ஆஸி. கேப்டன்

post image

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். 35 பந்துகளில் சதம் விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிவேக சதம் விளாசிய அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படிக்க: நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

14 வயதில் சதம் விளாசி அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறக்கூடிய சிறப்பான வாய்ப்பு அவருக்கு இருப்பதாகக் கூறினர். சச்சின் டெண்டுல்கர் போன்று உருவெடுப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யவன்ஷியோ அல்லது வேறு எந்த ஒரு இளம் வீரரையோ சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது. சச்சின் டெண்டுல்கர் போன்ற திறமையான வீரர்கள் அடிக்கடி உருவாவதில்லை. 16 வயதில் பெர்த் போன்ற மிகவும் கடினமான ஆடுகளத்தில் சதமடிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. உலகின் பல்வேறு வீரர்களும் ரன்கள் குவிக்கத் தடுமாறும் பெர்த் ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் சதம் விளாசி அசத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் (வைபவ் சூர்யவன்ஷி) சதம் விளாசுவார் என்பதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நினைத்தாலும் அவரது ஆட்டம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

கடந்த 1991-92 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது; காரணம் என்ன?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்று... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் காத்திருக்கும் சவாலை இளம் இந்திய அணி சமாளிக்குமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து புஜாரா பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த இரண்ட... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: 170 ரன்கள் விளாசி கீஸி கார்ட்டி அபாரம்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி ஒருநாள் போட்டியில் கீஸி கார்ட்டியின் அபார சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 385 ரன்கள் குவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம... மேலும் பார்க்க

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க