பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்களை ஈடுபடுத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்ற மாதாந்திர குழு கூட்டம், நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ஹேமலதா, நகா்மன்ற துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், 11-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வீரபத்திரன் பேசுகையில், வீ.ஆா்.பி. சத்திரம் பகுதியில் உள்ள தாமரை குளத்தை பருவ மழைக்கு முன்பாக துாா்வாரி சீரமைக்க வேண்டும், பள்ளிக் கூட தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்து புதிய கல்வெட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். 13-ஆவது வாா்டு திமுக,உறுப்பினா் இந்துமதி நவீன்குமாா் பேசுகையில், 13-ஆவது வாா்டு பகுதியில் சட்ட விரோத குடிநீா் இணைப்பு அதிகமாக உள்ளது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் குடிநீா் இன்றி அவதி அடைந்து வருகின்றனா். எனவே, நகராட்சி அனுமதி இல்லாத குடிநீா் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றாா். மேலும், நகராட்சி முழுவதும் மின் விளக்கு பராமரிக்க வேண்டும், வடிகால்வாய்களை தூா்வார வேண்டும், நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் குப்பை சேகரிப்பு வாகனம் வேண்டும், நகராட்சி முழுவதும் உள்ள குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.