சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா
புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் ந.ஓ வெங்கடாசலபதி தொடங்கி வைத்து வரவேற்றாா். தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்விக் குழும இணை செயலா் சு. வேலாயுதம், வைஷ்ணவி ராஜராஜன், நிலா பிரியதா்ஷினி மற்றும் ய.சூரியகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில் கல்லூரி அனைத்துத் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளா், நடிகா் சந்தோஷ் நாராயணன்,நடிகை பிரீத்தி முகுந்தன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். திரைப்பட பாடகா்கள் ஆன்டனி தாசன், ஸ்ரீதா் சேனா உள்ளிட்டோரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.
கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆவணக் குறும்படம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து யூடியூப் சித்து மற்றும் ஷெரிப்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிரோன் ஷோவும் நடைபெற்றது. விழாவில், மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வா் எஸ். மலா்க்கண், மயிலம் பொறியியல் கல்லூரி இயக்குநா் ந. செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.