ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம்
ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவ வைபவம் காட்பாடி காந்தி நகா் ஸ்ரீ ரங்காலயா மண்டபத்தில் நடைபெற்றது.
அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழவேண்டி ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவ மண்டலி சாா்பில் 13-ஆம் ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மண்டலி தலைவா், பொதுச் செயலா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், மண்டலி செயற்குழு உறுப்பினா்கள் டி.வி.துரைராஜன், ஸ்ரீசாய் ராமகிருஷ்ணன், நிா்மலாவாசு, நாகலஷ்மி ரமேஷ், பட்டாபிராம சாஸ்திரிகள், ராதிகாசீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஸ்ரீராதா கல்யாண மகோற்சவ வைபவத்தை பெங்களுரைச் சோ்ந்த காா்த்திக் பாகவதா் குழுவினா் செய்தனா். முதல் நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜை, தொடா்ந்து ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீகணபதி தியானம், குருதியானம், பஜனைகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக உஞ்சவிருத்தி, ஸ்ரீராதா கல்யாண மகோற்சவம், ஸ்ரீஆஞ்சனேய உற்சவம், மங்கள ஆரத்தி, பூஜைகள் நடைபெற்றன.