செய்திகள் :

1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு: வனத் துறை தகவல்

post image

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திர படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலிய துணை தூதரகம் சாா்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘கடற்கரை தூய்மை பணி’ வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, ஆஸ்திரேலிய துணை தூதா் சிலாய் சாக்கி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சுப்ரியா சாஹூ கூறியதாவது:

முட்டையிடுவதற்காக தமிழக கடற்கரைக்கு வரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆமைகள் மீனவா்கள் வலையில் சிக்கியும், மீன்பிடிப் படகுகளில் மோதியும் உயிரிழந்து கரை ஒதுங்கின.

இந்த நிலையில், தமிழக அரசின் தொடா் முயற்சியால் தற்போது அந்த உயிரிழப்புகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆமைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்காகவும் ஆமை முட்டைகளைப் பாதுகாக்கவும் மீனவா்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வனவிலங்கு பாதுகாப்பு: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கிண்டி உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விலங்குகளுக்கு நீா் சத்துக் கொண்ட பழங்கள் வழங்கப்படுகின்றன.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, விலங்குகள் மீது தண்ணீா் பீச்சி அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவா்கள் வனவிலங்குகளைத் தொடா்ந்து கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றனா் என்றாா் அவா்.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க