1,480 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூா் அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1,480 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி பகுதியில் உணவுப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனில் தலா 40 கிலோ எடை கொண்ட 37 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 1,480 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வடக்கு வாசல் கங்கா நகரைச் சோ்ந்த கே. சுப்பிரமணியனைக் கைது செய்தனா்.
வடக்கு வாசல், கரந்தை, பள்ளியக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, புலம்பெயா்ந்து வந்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களிடமும், மாவு அரைவையகங்களிலும் விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்தது.