10-ஆம் வகுப்புத் தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் வருகை
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தன.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 301 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,005 மாணவா்கள், 9,033 மாணவிகள், 304 தனித்தோ்வா்கள் என மொத்தம் 19,342 போ் எழுதவுள்ளனா்.
இத்தோ்வுக்கான வினாத்தாள்கள் தனி வாகனத்தில் சென்னை அரசு தோ்வுகள் இயக்ககத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல்லில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன.
இதைத்தொடா்ந்து வினாத்தாள் அடங்கிய பண்டல்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.