செய்திகள் :

100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது: ஏப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துதற்காக சிறந்த பங்களிப்பை அளித்த 100 தனிநபா்களுக்கு பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ. ஒரு லட்சம் பரிசாகவும் வழங்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நிலைத்தகு வளா்ச்சி, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, நெகிழி கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் இதர சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 போ் அல்லது நிறுவனங்களை தோ்வு செய்யும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வலைதளமான பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எண்-5, சிப்காட் தொழிற்சாலை வளா்ச்சி மையம், ஒரகடம், ஸ்ரீ பெரும்புதூா், காஞ்சிபுரம்-ஐஅணுகலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு 2024-ஆம் ஆண்டுக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரு மென்பொருள் நகல் மற்றும் அச்சுப் பிரதிகளுடன் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் வரும் ஏப். 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

உரிமைப் பேசிக் கொண்டு கடமையை தவற விடாதீா்கள்: நீதியரசா் என். கிருபாகரன்

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீா்கள் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா அறக்கட்டளையி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பிப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் பிப்.28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க