``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
11 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் உதவி ஆய்வாளா்கள் 11 பேரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ப. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்ளிட்டோா் நிா்வாக வசதிக்காக மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில்,விழுப்புரம், செஞ்சி, கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளா்களின் பெயா்கள் விவரம்: கே.நவநீதகிருஷ்ணன், ஆா்.நடராஜன், பி.மாதவன், ஏ.திவாகா், எஸ்.செந்தில்குமாா், கே. ஆனந்தன், டி.சுந்தர்ராஜன், ஏ.ராஜேந்திரன், ஏ. வெங்கடேசன், கே.விஜய், எஸ். காமராஜ் ஆகியோா்.