செய்திகள் :

'14 பசுமாடுகள், தினமும் 112 லிட்டர் பால், மாதம் ரூ.2 லட்சம்' - கலக்கும் இமாச்சலப் பிரதேசப் பெண்

post image

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர். வரலாறு பட்டதாரியான இவர், மாட்டுச் சாணம் மற்றும் பால் விற்பனை மூலம் மாதம் இரண்டு லட்சம் வருமானம் ஈட்டும் தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்.

"நான் சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தேன். எங்களது கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் தண்ணீராகவும், தரம் குறைந்ததாகவும் இருந்ததை கவனித்தேன்.

கல்லூரியில் படிக்கும்போது, 'நல்ல தரமான பாலை வழங்கினால் எப்படி இருக்கும்?' என்ற யோசனை எனக்குத் தோன்றியது. ஆனால், அதை எப்படி சாத்தியப்படுவது என்று அப்போது தெரியவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்... `படிச்ச பிள்ளை மாடு மேய்க்குது' என்று அக்கம் பக்கத்தினர் கேலி செய்தனர்.

சகீனா தாக்கூர்
சகீனா தாக்கூர்

ஆனால், படித்து முடித்து சுகாதாரத் துறை சர்வேயராக சிறிது காலம் பணியாற்றிய நான் ரூ.1.25 லட்சம் சேமித்து வைத்திருந்தேன். அத்துடன் ரூ. 2 லட்சத்தை வங்கியில் இருந்து கடனாக வாங்கி பால் பண்ணையைத் தொடங்கினேன்.

பசு மாடுகள் வாங்கும்போது புரத சத்து நிறைந்த அதிக பால் தரக்கூடிய பசு மாடுகளைத் தேர்வு செய்தேன்.

அதிக பால் தரக்கூடிய இனமான ஹால்ஸ்டீன் ஃப்ரீசியன் பசுவுடன் இப்போது எங்களது பண்ணையில் அதிக பால் தரக்கூடிய 14 பசுக்கள் உள்ளன. அவை தினமும் 112 லிட்டர் பால் தருகின்றன.

அடுத்ததாக, எங்களது பண்ணையில் நவீன வசதிகளுடன் கூடிய கொட்டகையை அமைத்தேன். பால் கறக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் இயந்திரம், பால் குளிர்விப்பான் ஆகியவற்றை வாங்கினேன்.

எங்கள் பண்ணையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி சாணத்தை கரிம உரமாக மாற்றி விற்பனை செய்தோம். எங்கள் ஊரில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து பெண்கள் தலைமையிலான பால் கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கினோம்.

இதன் விளைவாக, எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்தும் உதவி கிடைத்தது. இமாச்சலப் பிரதேச மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சில இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி உதவியது.

சகீனா தாக்கூர்
சகீனா தாக்கூர்

மேலும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் கொள்கைகளால் மாநிலத்தின் பால் கொள்முதல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போது எங்களுக்கு லிட்டருக்கு ரூ.41–44 கிடைக்கின்றது.

அதனால், இந்த விலை உயர்வு எங்கள் வருவாயை நன்றாக அதிகரித்துள்ளது. தற்போது. பால் மற்றும் சாணம் விற்பனை மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்" என்கிறார் சகீனா.

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிள், மார்பிளை புறக்கணிக்கும் மும்பை, ராஜஸ்தான் வியாபாரிகள்!

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை? நிதி கமிஷன் அறிக்கை

மகாராஷ்டிரா நாட்டின் பணக்கார மாநிலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி குறித்து 16வது நிதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பது தெரிய வ... மேலும் பார்க்க

SRM: பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் தொடக்கம்

தமிழ்நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, தன்னுடைய நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர் பெற்ற SRM குழுமம், ராமாபுரத்தில் முதன... மேலும் பார்க்க

Aswins: தஞ்சாவூரில் 42 வது கிளையைத் தொடங்கிய அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தனது 42-வது கிளையை தஞ்சாவூரில் ( Aswins sweets Tanjore )கோலாகலத்துடன் தொடங்கி இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் அஸ்வின்ஸ... மேலும் பார்க்க

GK dairy: கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா!

கும்பகோணம் அருகே உள்ள குறிச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி கே டெய்ரியின் 50வது ஆண்டு விழா, தமிழ் பால் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவும், தமிழ் பாலின் ( GK Dairy -Tamil Milk ) புதிய அவதாரஅறிமுக ... மேலும் பார்க்க

GRT: 'இது வளத்திற்கான வாக்குறுதி' - ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் அட்சய திருதியை கொண்டாடுங்கள்!

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் எளிய தொடக்கத்திலிருந்து இன்றளவும் நகைத் துறையின் அசைக்கமுடியாத மிக நம்பகமான பெயர்களில் முதன்மையாக ஒன்றாக வளர்ந்துள்ளது. 60 ஆண்டுகளை கடந்த பாரம்பரியத... மேலும் பார்க்க