செய்திகள் :

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஸிங்..! 42 கிலோ எடையைக் குறைத்த அஜித்!

post image

நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தற்போது பைக் ரேஸிங்கில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்.

ரேஸிங்கிற்காக நடிகர் அஜித் உடல் எடையைக் குறைதத்தாகக் கூறியுள்ளது சமூக ஊடகங்களில் வைரலானது. அஜித் பேசியதாவது:

15 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸிங்கில் பங்கேற்கிறேன். அதனால் எனக்கு மிகுதியான உடற்தகுதி தேவைப்பட்டது. 8 மாத கால இடைவெளியில் 42 கிலோ எடையைக் குறைத்தேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு இதைக் குறைத்தேன்.

நான் ஒரு டீடோட்டலராகவும் சைவ உணவை உண்பவராகவும் மாறிவிட்டேன். ரேஸிங்கிற்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். ரேஸிங்கிற்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.

எனது படங்களில் சண்டையிடுவதும் நான்தான். அதிலும் காயம் ஏற்படுகிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டேன். அதேபோலதான் ரேஸிங்கிற்கும் உடலும் உள்ளமும் அதிகமான ஈடுபாடு தேவைப்படுகிறது. அதனால், இதில் காயம் ஏற்படுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறினார்.

மீண்டும் நடிப்பிற்குத் திரும்பிய எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். விக்ரமுடன் ... மேலும் பார்க்க

20 கோடி பார்வைகளைக் கடந்த தாராள பிரபு பாடல்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் இடம்பெற்ற பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ... மேலும் பார்க்க

ஆண்டவரே என்ன இது... புலம்பும் சிம்பு ரசிகர்கள்!

தக் லைஃப் திரைப்படத்தின் காட்சிகள் சிம்பு ரசிகர்களிடம் சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள... மேலும் பார்க்க

4 மாதத்தில் திருமணம்: விஷால்

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத... மேலும் பார்க்க

மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் முதல்நாள் வசூல் எவ்வளவு?

மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படங்களின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரியின் மாமன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய திரைப்படங்கள் நேற்று (மே. 16) திரையரங்குகளில் வெ... மேலும் பார்க்க

ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!

லா லீகா கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பார்சிலோனா வீரர்கள் கொண்டாட்டம் கவனம் ஈர்த்து வருகிறது. லா லீகா கோப்பை ஸ்பெயின் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராகும். இதில் 36-ஆவது போட்டியில் விளையாடிய பார்சில... மேலும் பார்க்க