150 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
சுங்குவாா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் முருகன்(47). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். அதே போல் கூத்தவாக்கம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் முத்துலிங்கம்(42) இவரும் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், முருகன் மற்றும் முத்துலிங்கம் இருவரும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் முருகன் மற்றும் முத்துலிங்கம் கடைகளில் சோதனை செய்துள்ளனா். அதில் இரண்டு கடைகளிலும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.