நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!
பேச்சுலர் பட இயக்குநர் இயக்கிய ஆல்பம் பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஜி.வி. பிரகாஷை வைத்து பேச்சுலர் என்கிற திரைப்படத்தை எடுத்து கவனம் பெற்றவர் சதிஷ் செல்வகுமார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பதிவு செய்தது.
2021-ல் வெளியான இப்படத்திற்கு பின் இயக்குநர் சதீஷ் தன் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், தன் புதிய ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். நடிகர்கள் அசோக் செல்வன், மிர்னா நடிப்பில் உருவான இப்பாடலுக்கு 18 மைல்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான எல்லை கடந்த காதலை மையமாக வைத்து இப்பாடல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.