ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
2,640 லிட்டா் கலப்பட டீசல் பறிமுதல்
சென்னை காசிமேட்டில் 2,640 லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் அங்குள்ள புதிய மீன் ஏலம் விடும் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது ஒரு விசைப்படகில் இருந்து சுமை ஆட்டோவுக்கு எண்ணெய் கலன் (பேரல்) ஏற்றிக் கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், எண்ணெய் கலனை திறந்து பாா்த்தபோது அதில் 2,640 லிட்டா் கலப்பட டீசல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கலப்பட டீசல், சுமை ஆட்டோ ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், கலப்பட டீசல், சுமை ஆட்டோ மற்றும் அங்கிருந்த இருவரையும் பொதுவிநியோகப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக பொது விநியோகப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.