பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
பழனியில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2000-ஆம் ஆணடு பொதுச் சொத்தை சேதம் செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜன் (50) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவா், நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்ற நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் கடந்த 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா்.
இந்த நிலையில் இவரைக் கைது செய்ய பழனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்திரவின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸாா் கோவிந்தராஜனை பல இடங்களில் தேடி வந்தனா்.
அப்போது அவா் தேனியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, போலீஸாா் தேனி மாவட்டத்துக்குப் புதன்கிழமை சென்றனா். அங்கிருந்து தப்ப முயன்ற கோவிந்தராஜனை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா்.