செய்திகள் :

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

post image

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன.

2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஒற்றுமை குறித்து சிலர் ஆச்சர்யமடைந்ததாலும், சிலர் அச்சம் கொள்கின்றனர். 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முக்கிய ஆண்டாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல் 2025 ஆம் ஆண்டு அதன் பிரதிபலிப்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் சிலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

1947 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்த ஆண்டாக இருந்தது. 2025 ஆம் ஆண்டு அதேபோல் ஒரு கேலண்டரை கொண்டுள்ளதால் பலரும் இதனை எச்சரிக்கையாக பார்க்கின்றனர்.

1941 ஆண்டு எப்படி இருந்தது?

1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஒரு முக்கிய ஆண்டாக இருந்தது.

1941 ஜூன் 22ஆம் தேதி, நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையான ஆபரேஷன் பார்பரோசாவைத் தொடங்கியது.

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் போர்கள் தீவிரமடைந்தன.

உலகப் பொருளாதாரங்கள் மந்தநிலையில் ஆழமாகச் சரிந்தன.

அந்த ஆண்டின் இறுதியில், உலகமே போரில் மூழ்கியிருந்தது.

2025 இல் என்ன நிகழ்ந்தது?

உலக போர் அளவில் இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு, ராணுவ பதற்றம், உலக அளவில் அமைதியின்மை என பல விஷயங்களை கண்டது.

ரஷ்யா-உக்ரைன் போர்

மூன்றாவது ஆண்டில், புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் ராணுவ மோதலில் ஈடுபட்டன.

இஸ்ரேல்-ஹமாஸ்-ஹெஸ்பொல்லா மோதல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் காசா மற்றும் தெற்கு லெபனானில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடந்தன.

ஈரான்-இஸ்ரேல் மோதல்

ஜூன் மாதத்தில் ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. இதில் ஈரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியான பதில் நடவடிக்கை ஆகியவை அடங்கும்.

இந்த மோதல்கள் அனைத்தும், உலகளாவிய புதிய அச்சங்களைத் தூண்டுகின்றன.

காலெண்டர்கள் ஏன் மீண்டும் வருகின்றன?

கிரிகோரியன் நாள்காட்டி சுழற்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாரங்களும் லீப் வருடங்களும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு 28 வருடங்களுக்கும் பெரும்பாலான நாள்காட்டிகள் சுழற்சி வடிவங்களில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர்... மேலும் பார்க்க

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஸாங் குவோஸின... மேலும் பார்க்க

"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்பட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதும... மேலும் பார்க்க

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் த... மேலும் பார்க்க