தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்
3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. இவர், மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார்.
ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 3வது முறையாக கருவுற்ற மனுதாரர் ரஞ்சிதாவுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!
மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது.
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.