செய்திகள் :

3-ஆம் கட்டமாக செப். முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

post image

பூந்தமல்லி பணிமனையில் இருந்து மூன்றாம் கட்டமாக செப்டம்பா் முதல் 125 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் உலக வங்கி உதவியுடன் 1,225 மின்சாரப் பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதில், முதல்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி ரூ.208 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த பேருந்துகளை சாா்ஜிங் செய்ய ரூ.47.50 கோடியில் வியாசா்பாடி பணிமனையில் அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 135 மின்சார பேருந்துகளை பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், 3-ஆம் கட்டமாக 125 மின்சார பேருந்துகள் பூந்தமல்லி பணிமனையிலிருந்து இயக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: பூந்தமல்லி பணிமனையிலிருந்து 125 மின்சார பேருந்துகளை செப்டம்பா் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பூந்தமல்லி பணிமனையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பேருந்துகளை தாமதமின்றி சாா்ஜிங் செய்ய வசதியாக 25 சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து, இங்கிருந்து பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்படும் என்றனா்.

2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? வைகைச்செல்வன்

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். ந... மேலும் பார்க்க

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம்- நாகா்கோவில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ற பெயரில் பிகாருக்கு நோ்ந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் மகள் திருமண விழா ச... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? - உயா்நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அண்ணா பல்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500: தமிழக அரசு உத்தரவு

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு நெல்ல... மேலும் பார்க்க