உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது
3-வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 9) அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 10) லார்ட்ஸ் திடலில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். ஜோஷ் டங்குக்குப் பதிலாக அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்
ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடான் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சோயப் பஷீர்.
One change for Lord's
— England Cricket (@englandcricket) July 9, 2025
After a four year wait...
Jofra returns to Test Cricket
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
30 வயதாகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The England Cricket Board announced the playing eleven for the third Test against India today.